திருமணத்திற்கு பின்னர் பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக காரணம் என்ன?
- Mia Mami
- Jan 2, 2021
- 1 min read
பெண்ணின் உடலானது பெரிய அறிவியல் ஆய்வகம் என்றே சொல்லலாம். அங்கு நடக்கும் சின்ன சின்ன மாற்றத்திற்கும் காரணம் பல உண்டு. பெண் ஆனவள் பிறக்கும் போதே, மூன்று லட்சம் முதிராத கருமுட்டையோடு தான் பிறக்கிறாள். வளர வளர உடல் மாற்றம் அடைந்து கொண்டே வரும். இடுப்பு அகலும், மார்பு பகுதி பெரிதாகும். வயதிற்கு வந்து, கருமுட்டைகள் முதிர்ச்சி அடைந்ததை சுட்டிக்காட்டும்.
திருமணமாகி உடல் இணைவுக்கு தயாராக இருக்கும் போது, மார்புகள், உதடுகள் கிளர்ச்சி அடையும். இந்த நிலை தொடர்ந்தால், உடலின் உள்ளே தாய்மை நிலைக்கு தயாராகிகொண்டு இருக்கும். இதனாலே திருமணத்திற்கு பின்னர் பெண் பூசினார் போல ஆகிவிடுகிறார். உதடு, மார்பு பெரிதாகி அவ்வாறு தோற்றமளிக்க செய்கிறது. அத்தனையும் தாய்மை எனும் பேருக்கு தான்.
திருமணத்திற்கு முன்னர் செப்பு சிலையாக காட்சி கொடுத்த பெண்கள், திருமணத்திற்கு பின்னர் இடுப்பு பெரிதாகி தாய்மை அடைந்து பார்க்க குண்டாக தோற்றமளிப்பதால் பல கணவன்மார்களுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. திருமணத்திற்கு முன்னர் இருந்ததை விட, பின்னர் தான் பெண்கள் மதிக்கப்பட வேண்டும். ஆனால் மதிக்கப்பட வேண்டிய பெண்ணை குண்டாக இருப்பதை காரணம் காட்டி தவிர்க்கும் கணவன்களும் உண்டு.
இடுப்பு பெரியதாகி, குண்டாக இருந்தால் அவர்களை வெளியே அழைத்து செல்ல மறுக்கும் கணவன்கள், பாக்யராஜ் நடித்த சின்ன வீடு படத்தை பார்த்தாவது திருந்த வேண்டும். படத்தின் கிளைமேக்சில் குண்டாக இருக்கும் மனைவியை நினைத்து பெருமை பட்டு பாக்யராஜ் கூட திருந்தி விடுகிறார், ஆனால் பெண்களின் உடல் தகவமைப்பை புரிந்துகொள்ளாமல் இப்போதும் அதே வளைவு நெளிவை எதிர்பார்க்கும் கணவன்மார்களும் திருந்தவே இந்த பதிவு!
For more informationhttps://gplinks.co/rZDAaCa
Comments